திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கிளைச் செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய துணை செயலாளர் கே.செல்வராஜ் தலைமையில் தனியார் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற கிளைச் செயலாளர் கூட்டத்தில் எதிர்கால கடமைகள் குறித்து ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் பேசினார். அப்போது வலங்கைமான் 50 ஊராட்சிகளிலும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை பற்றி மக்கள் மத்தியில் பிரச்சார நடை பயணம் மேற்கொள்ளும்படும்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பரை செய்வதற்கான மே 5 முதல் 10வரை 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஐந்து குழுக்களும் 50 ஊராட்சிகளிலும் பிரச்சாரம் பயண இயக்கம் மேற்கொள்ளப்படும். இதில் ஜனசக்தி சந்தா சேர்ப்பு பணி வரும் மே 5 தேதி கணக்குகள் அனைத்தையும் முடிக்கப்படும். வலங்கைமான் வருவாய் துறை அலுவலகத்தில் 3 பிற்காவிற்கான நில அளவையாளர்கள் இல்லாததை கண்டித்தும் புதிதாக அலுவலகர்களை அமைக்க வலியுறுத்தியும். 83ரெகுநாதநாதபுரம் ஊராட்சியில் கோயில்மனையில் குடியிருப்பவர்களுக்கு இடமாற்றம் செய்து உடனடியாக அவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், நீடாமங்கலம் முதல்வரை கும்பகோணம் செல்லும் சாலையை உடனடியாக சாலை பணியை விரைவாக முடிக்க வேண்டும் என கோரியும். மற்றும் நல்லூர் கோவிந்தகுடி ஊத்துக்காடு சாலையில் அமைந்துள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள அரசு மது கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரியும். ஆலங்குடி உள்ள இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட காலமாக டாக்டர்கள், செவிலியர் இல்லாததை கண்டித்தும் வரும் 30ம் தேதி செவ்வாய் கிழமை சாலைமறியல் அறிவித்து சாலை மறியல் விளக்க ஆர்ப்பாட்டம் மே 20 ஆம் தேதி அறிவித்தும் நடைபெறும் என நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கிளைச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கு.ராஜா, ஜனசக்தி ஒன்றிய பொறுப்பாளர் சி தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. சின்ன ராசா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி ரவி, இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் வி.பாக்கியராஜ் மற்றும் கலியமூர்த்தி, மருதையன், பூசாந்திரம், ராஜேஷ் கண்ணா ஒன்றே குலத் தோழர்கள் கிளை செயலாளர்கள் உள்ளிட்டரகள் பலர் கலந்து கொண்டனர்கள்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment