இந்த வாய்க்கால்களில் உள்ள படுக்கை மட்டம் துர்ந்தும், மண் திட்டுகள் ஏற்பட்டும் மற்றும் உட்பகுதி முழுவதும் காட்டாமணக்கு மற்றும் செடி, கொடிகள் படர்ந்தும் சீரான நீரோட்டத்திற்கு இடையூறாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் பாசனம் மற்றும் மழைக்காலங்களில் பாசனத்திற்கு இடையூறாகவும் மற்றும் வெள்ளநீர் வடியாமல் உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு ஆளாகி வந்தது.

இந்த நிலையில், சவளக்காரன் வாய்க்கால் 5.50கிமீ தூரத்திற்கும், நாலாநல்லூர் வாய்க்கால் 4. 50 கிமீ தூரத்திற்கும் ரூ 10 லட்சம் மதிப்பில் தூர்வார முடிவு செய்யப்பட்டு மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கர்ணாவூர் ஊராட்சி பாமணி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட இரண்டு பாசன வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை மாநில திட்டக்குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மதன் சுதாகரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பரவை முத்துவேல் , சித்தேரி சிவா, வக்கீல் கவியரசு, ஊராட்சி மன்ற தலைவர் சாரதி சரவணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment