திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணியினை மேற்கொண்டனர். குறிப்பாக நீடாமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். இத்தகைய சூழலில் தேவங்குடி, வெள்ளக்குடி, மேலாளவந்தசேரி, அரிச்சபுரம் உள்ளிட்ட கிராமத்தில் ஒருவாரமாக பெய்துவரும் கனமழையினால் 600 ஹெக்டர் பருத்தி பூ பூத்து காய் வைக்க கூடிய பருவத்தில் உள்ள பருத்தி செடிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

மாற்று பயிராக விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொண்ட நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பருத்தி முழுவதும் செடிகள் சோர்ந்து அழுகக்கூடிய தருவாயில் உள்ளதால் விவசாயிகள் கடும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ள நிலையினை இதனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வர் உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே பருத்தி சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளை பாதுகாக்க முடியும் என பருத்தி விவசாயிகள் மனவேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேவங்குடி விவசாயி பிரபாகரன் கூறுகையில் : தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக நாட்களாக பெய்து வரும் கனமழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது இங்கே இருக்கக்கூடிய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு ஏக்கருக்கு விதை போடுவதற்கு மருந்து, உரம், ஆட்கள் கூலி என இதுபோன்ற 30 முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் பூ பூத்து காய்க்க கூடிய தருவாயில் தொடர் மழையால் பயிரிடப்பட்ட பருத்திகள் முழுவதும் சோர்ந்து அழுகும் நிலையில் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கக்கூடிய ஒரு விவசாயிகளை கூட சந்தித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட பெறவில்லை.
இதனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என தெரிந்தனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment