மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 May 2023

மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரோட்டரி சங்கம் சார்பில் 15 க்கும்  மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்  கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்கள் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 25 ஆண்டு காலமாக கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு கண்ணொளி தந்திடும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 170 முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 17 ஆயிரத்து 200 பேர் அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை பெற்றுள்ளனர். 

இந்நிலையில் மன்னார்குடி வடசேரி சாலையில் உள்ள ஆண்டாள் வெங்கடேசன் அரங்கில் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் கார்த்திகேயன்,மற்றும் மன்னார்குடி கலியபெருமாள் ரெத்தின சபாபதி, அர்விந்த் சங்கர் குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னார்குடி மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்துகொண்டு பங்கேற்றனர்.


கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் நோய்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை செய்தனர். 70 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


- செய்தியாளர்  தருண்சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad