திமுகவிற்கு எதிர்க்கட்சி என்பது எந்த கட்சியும் கிடையாது - திமுக பேச்சாளர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 May 2023

திமுகவிற்கு எதிர்க்கட்சி என்பது எந்த கட்சியும் கிடையாது - திமுக பேச்சாளர்.


திமுகவிற்கு எதிர்க்கட்சி என்பது எந்த கட்சியும் கிடையாது அதிமுகவில் வெவ்வேறு அணிகள் உருவாகிறதால்  இதில் திமுகவை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை என தமிழகத்திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பேச்சு.



தமிழகத்திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு ஒன்றியம் வடபாதிமங்கலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் ஒன்றிய கழக செயலாளர் ஐ.வி.குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
 

அப்போது திமுக அரசு பொறுப்பேற்றதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. அதேபோல் பெண்களுக்கு இலவச பேருந்து மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார் என தெரிவித்தனர்.
 

திமுகவிற்கு எதிர்க்கட்சி என்பது எந்த கட்சியும் கிடையாது அதிமுகவில் வெவ்வேறு அணிகள் உருவாகிறதால்  இதில் திமுகவை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை மத்தியில ஆளக்கூடிய பாரதிய ஜனதா மோடி அரசாங்கம் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


19 ஆண்டுகாலம் கலைஞர் முதலமைச்சராக இருந்தார் அவருக்கு கிடைக்காத பட்டம் அவரையும் தாண்டி மூன்றுமாதகால ஆட்சியிலேயே நம்முடைய இன எதிரிகள் இவர் கலைஞரை விட ஆபத்தானவர் என அறிவித்தார்கள் என்றால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சிறப்பு இதுதான் எங்கள் தளபதிக்கு கிடைத்திருக்கின்ற ஆகசிறந்த பட்டம் என்றார்.


இதனை தொடர்ந்து மாற்று கட்சியினர் அவர்களது கட்சியிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் கழக ஒன்றிய நிர்வாகிகள் பலரும், ஏராளமான பொதுமக்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad