மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் யானை பாப்கட்டிங் செங்கமலம் கோயில் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீரில் விளையாடி மகிழ்ந்தது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் பார்த்து ரசித்தனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 April 2023

மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் யானை பாப்கட்டிங் செங்கமலம் கோயில் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீரில் விளையாடி மகிழ்ந்தது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் பார்த்து ரசித்தனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னாா்குடியில்  மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான பாப் கட்டிங் செங்கமலம் யானைக்கு இந்து அறநிலைத்துறை சார்பில் 20 இலட்சம் மதிப்பில் நீச்சல் குளம் கட்டி தந்துள்ளனர்.   தற்போது  சித்திரை மாதத்தில்  தொடங்கிய கடும் வெப்பத்தை தணிக்க  முடியாமல் ராஜகோபாலசுவாமி கோயில் யானை “பாப் கட் செங்கமலம்”  நீச்சல் குளத்தில் குளித்து  மகிழ்ந்துள்ளது.    

தற்போது பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து கடும் வெப்பத்தில் பொதுமக்கள் அவதியுற்று பல்வேறு மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று வரும் இந்த வேளையில், கடும் கோடை வெப்பத்தில் சூட்டை தணிக்கும் விதமாக ராஜகோபால சுவாமி கோவில் யானை பாப்கட்டிங் செங்கமலம்  கோயில் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீரில் விளையாடி மகிழ்ந்தது.   


செங்கமலம் யானை நீச்சல் குளத்தில் நீரினை வாரி இறைத்து விளையாடி மிழ்ந்தனை  ஏராளமானேர் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.




-செய்தியாளர்: தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad