
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட தலைவர் களப்பாள் குப்புசாமி நடேசன் ஆகியோரின் 75ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே களப்பால் என்ற இடத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம், உலகநாதன், மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்ராயன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிராடு கம்பெனிகளை துவக்கி அதன் மூலம் கடன்களை பெற்று பொதுத்துறை நிறுவனங்களிலும் பொதுத்துறை வங்கிகளையும் பகிரங்கமாக கொள்ளையடித்த குற்றவாளி இந்த அதானி, அந்த அதானி பற்றி வாயே திறக்க மறுக்கிறார் பிரதமர் மோடி திடீர் திடீர் என கோடங்கி மாதிரி வேடம் போட்டுக்கொண்டு வெளியிலே நடமாடுகின்ற இந்த மோடி நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இல்லை ஒரு பொருள் சமூகத்தின் செல்வத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு பேருடைய கைகள் தான் காரணம் ஒன்று தொழிலாளி வர்க்கங்களின் கை இன்னொன்று உணவை உற்பத்தி செய்கிற விவசாயிகளின் கை இந்த இரண்டு கைகள் தான் இந்தியாவின் செல்வத்தை படைத்த பிரம்மாக்கள் விவசாய குடும்பத்தில் பிறந்த யாராவது ஒருவர் தப்பித்தவறியாவது பிஜேபிக்கு வாக்களிக்கலாமா? பிஜேபிக்கு வாக்களிக்க சொல்லுகிற கட்சிக்கு வாக்களிக்கலாமா? நாட்டை திவாலாக்கி விட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் செல்வத்தை கணக்க வைக்கின்ற இந்த குற்றவாளிகள் நாட்டை ஆளலாமா இதுதான் இன்றைக்கு நம்முள் உள்ள கேள்வி.? கடந்த எட்டு வருடங்களில் 30லட்சம் கோடி வரிச்சலுகைகள் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களால் நாட்டை காப்பாற்றுவார்கள் இவர்கள் ஒருபோதும் நாட்டை காப்பாற்ற மாட்டார்கள் எனவே இவர்களை வீழ்த்துவது தான் தேசத்தை காப்பாற்ற விரும்புவர்களின் தலையாய பணி அந்தப் பணியை இன்றைய தியாகிகளின் பெயரால் நம் சங்கர்பம் ஏற்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பிஜேபி மற்றும் அவற்றோடு இணைந்து வருகின் சகல கட்சிகளையும் முறியடிக்க வேண்டும் பிஜேபியை வருகின்ற 2024 தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றால் இந்தியாவில் இனி தேர்தல் நடக்காது. இந்திய அரசியல் சட்டம் கிழித்து ஏறியப்படும் பிராமண மேலாதிக்கத்தின் கீழ் இந்தியா சர்வாதிகார நாடாக மாறும் அவற்றை தடுக்க பிஜேபியை தோற்கடிக்க சங்கர்ப்பம் ஏற்க களப்பால் தியாகி குப்புவின் பெயரால் கம்யூனிஸ்ட் இயக்க தியாகிகளின் பெயரால் சங்கர்பம் ஏற்க வேண்டும் என என்றார்.
- செய்தியாளர் தருண் சுரேஷ்.
No comments:
Post a Comment