தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நன்னிலம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இலக்கியா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது வலங்கைமான் கடைத்தெருவில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று காவல் நிலையம் முன்பு முடிவடைந்தது இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அப்போது ஒலி பெருக்கி மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்ட கூடாது, சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் உரிய தகுதி சான்று பெற்று வாகனங்கள் ஒட்ட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை காவல்துறை அதிகாரிகள் வலங்கைமான் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
-செய்தியாளர்:தருண் சுரேஷ்
No comments:
Post a Comment