அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை தொடர்ந்து மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 April 2023

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை தொடர்ந்து மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுக்குழுவை ஏற்று, முன்னாள் முதல்வரும், அதிமுக எதிர்கட்சி தலைவருமாகிய  எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செல்லும் என   இரட்டை இலை சின்னம் ஒதுக்கி, தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை வரவேற்று  எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள், அதிமுகவினர் தமிழகம் முழுவதும்  பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் தேரடி அதிமுக அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார், தொடர்ந்து ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, வாழ்த்து கோஷங்கள் முழங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 


இதில் அதிமுக கழக அமைப்பு செயலாளர்  சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன்,  மன்னை நகர கழகச் செயலாளர் ஆர்ஜிகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


- செய்தியாளர் தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad