கூந்தலூர் கிராமத்தில் வீட்டின் கூரை கூட வேய முடியாத நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் உயிர் பயத்துடன் வாழும் மக்கள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 April 2023

கூந்தலூர் கிராமத்தில் வீட்டின் கூரை கூட வேய முடியாத நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் உயிர் பயத்துடன் வாழும் மக்கள்.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் கூந்தலூர் என்ற ஊராட்சி உள்ளது . இந்த ஊராட்சியில் செம்பியன் கூந்தலூர் என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த செம்பியன் கூந்தலூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள் அங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை குறுகிய காலத்தில் சிதிலம் அடைய அதன் பிறகு 25 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த வீடுகள் பழுது பார்த்து கொடுக்கப்பட்டுள்ளன. 


ஆனாலும் சரி வர பழுது பார்க்காததாலும் மேலும் வீடுகள் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாலும் தற்பொழுது வீடுகள் காரை பெயர்ந்து சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் சூழலில் உள்ளது இதனால் குழந்தைகளுடன் வசிக்கக்கூடிய இந்த 30 குடும்பங்களும் உயிர் பயத்துடன் இந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

அரசின் வீடு கட்டும் திட்டத்தின் படி இப்பகுதி மக்களில் 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் அந்த பணத்தை வைத்து எதுவும் பண்ண முடியாத சூழ்நிலையில் மேற்கொண்டு பணம் இல்லாததால் நாள்தோறும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் இந்த மக்கள் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் உள்ள 30 குடும்பங்களும் பாதுகாப்பாக வாழ  வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுகுறித்து குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் இடம் கேட்ட பொழுது  அந்த பகுதியில் 15 வீடுகள் கட்ட அரசின் ஒப்புதல் பெறப்பட்டு முதல் தவணை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முதல் தவணைத் தொகையைக் கொண்டு வீட்டின் வேலையை ஆரம்பித்தால் தான் அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும் எனவும், மேலும் உள்ள வீடுகள் வரக்கூடிய ஆண்டுகளில் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.


- செய்தியாளர் ரா.பிரியங்கா 

No comments:

Post a Comment

Post Top Ad