கொல்லுமாங்குடி பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் காயின்களும் செல்லாது என வணிகர்கள், பேருந்து நடத்துனர்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 April 2023

கொல்லுமாங்குடி பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் காயின்களும் செல்லாது என வணிகர்கள், பேருந்து நடத்துனர்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி.


திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி, பேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ஐந்து ரூபாய் நோட்டுகளும், பத்து ரூபாய் நாணயங்களும் செல்லாது என வணிகர்கள், பேருந்து நடத்துனர்கள் கூறுவதாலும் மேலும் வணிகர்களிடமிருந்து மக்களும் அதை திரும்ப வாங்க மறுப்பதாலும், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள். 

மேலும், திருவாரூர் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை வழித்தடத்தில் மயிலாடுதுறை நோக்கி செல்லக்கூடிய பல பேருந்துகளில்  நடத்துனர்கள் ஐந்து ரூபாய் நோட்டுகள் மற்றும் பத்து ரூபாய் காயின்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

   

அதுபோலவே பல இடங்களில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும் பத்து ரூபாய் காயின்களையும் கொடுத்தால் செல்லாது எனக்கூறி வாங்க மறுக்கிறார்கள்...  என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் நாணயங்களையும்  பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்...


- செய்தியாளர் ரா.பிரியங்கா 

No comments:

Post a Comment

Post Top Ad