கிராமத்தில் ஆண்டுதோறும் பம்பு செட் மூலம் கோடை பருவ சாகுபடி பணியை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருவது வழக்கம். குறிப்பாக கோடை சாகுபடி பணிகளுக்கு மின்சார தேவை என்பது அவசியமான ஒன்று. ஆனால் அதிகாரிகள் இக்கிராமங்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்காமல் பல இடங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு மின்சாரத்தை அதிகாரிகள் வழங்கி வருவதால் இப்பகுதி விவசாயிகள் கோடை சாகுபடி பணியை சரிவர செய்ய முடியாமலும் அவதியுற்று வருகின்றனர். இதனால் நேரடி விதைப்பு செய்துள்ள பயிர்கள் மின்சார தட்டுபாட்டால் தண்ணீர் இல்லாமல் கருக தொடங்கியுள்ளது.

இது சம்பந்தமாக தமிழக மின் வாரிய உயர் அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்த போதிலும் கோடைக்காலங்களில் மின்சாரம் சரிவர கிடைக்காமல் விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சித்தேரி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் விவசாயித்திற்கு தங்கு தடையில்லாமல் இனி முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் விவசாயிகள் தாங்கள் போராட்டத்தை விளக்கி கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.ஐ ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ராகவன், ஊராட்சி தலைவர்கள் கே.சேகர், லோகநாதன், மாசிலாமணி, மற்றும் விவசாயிகள் கண்ணன், செல்வராஜ், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் துரை அருள்ராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏ.ராஜேந்திரன், ஆர்.அமிர்த ஜெயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து துரை அருள்ராஜன் விவசாயி கூறுகையில், தலையாமங்கலம் ஏத்தக்குடி ,சோழ பாண்டி, நெம்மேலி , தென்பாதி, சித்தேரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 10 மணி நேரம் கொடுக்கிறார்கள் ஆனால் இடை இடையே மின்சாரம் நிற்த்தி விடுகிறார்கள். இந்த கோடையில் வெயில் காலத்தில் சாகுபடி பணிகள் செய்யப்பட்ட இளம் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி போகிறது.
தொடர்ந்து இதுகுறித்து தமிழக அரசுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் அவர்கள் விவசாயிகளை அலட்சியம் செய்து வருகிறார்கள் இதனை கருத்தில் கொண்டு தொடர் மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டம் ஏறத்தாழ நெற்பயிர்கள் விளைச்சல் மொத்தம் 13 லட்சம் வெக்டர் பரப்பளவில் அரசாங்கத்தில் கண்காணிப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விவசாயிகளை பாதுகாக்க கூடிய இந்த அரசு முப்போகம் விளைந்த இந்த பகுதி ஒரு போகம் விளைச்சலுக்கே நிலை இல்லாத சூழலில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது .
இதனை போக்கிட தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் ஆறு மணி நேரம் அல்லது ஆறு மணி நேரம் டெல்டா பகுதி அல்லாத பகுதி பிரித்து வழங்குவதை விவசாயி நலன் கருதி விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி முழுமையாக 18 மணி நேரமாக மின்சாரம் வழங்கப்பட வேண்டும் தமிழ் நாட்டில் பன்னாட்டு பெரும் முதலாளிகள் நடத்த கூடிய பெரும் நிர்வணங்கள் தடை இல்லா மின்சாரம் 24 மணி நேரம் செல்கிறது.
அதே போல் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். எங்களுடைய கோரிக்கை களை அரசு கவனம் செலுத்தி நிறைவேற்றி தர வேண்டும். இல்லை என்றால் மிக பெரிய போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கிறோம் என தெரிவித்தனர்.
- செய்தியாளர் தருண் சுரேஷ்.
No comments:
Post a Comment