
அதில் ரூ.90 ஆயிரத்து 150 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 97 வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சைபர்கிரைம் காவல்துறையினர் கூறுகையில், சைபர்குற்றவாளிகளால் மோசடி செய்யப்பட்டவர்களின் பணத்தை மீட்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. சைபர்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பொதுவாக போலியான இணையதள முகவரியை உருவாக்கி பயன்படுத்துகின்றனர்.
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும்.வங்கி கணக்கு காலாவதியாகிவிட்டது என்று குறுஞ்செய்தி வந்தால் வங்கியை நேரில் தொடர்பு கொள்ளுங்கள். மாறாக தேவையற்ற செல்போன் அழைப்புகளில் வங்கி கணக்கு விவரங்களை தெரிவக்க வேண்டாம்.
சமூக வலைதளங்களில் முன், பின் தெரியாதவர்களிடம் எந்த தகவலையும் பகிர வேண்டாம். மேலும் அவற்றில் பதிவிடும் பதிவுகளை கவனமாக பதிவு செய்ய வேண்டும். சைபர் குற்றவாளிகள் மூலம் பாதிக்கபட்டால், உடனே அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்கலாம்.வங்கி கணக்கில் இருந்து எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தாலும் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment