மன்னார்குடியில் அ. தி.மு.க அலுவலகத்தில் நகர அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர், மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் இளநீர், வழங்கினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 April 2023

மன்னார்குடியில் அ. தி.மு.க அலுவலகத்தில் நகர அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர், மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் இளநீர், வழங்கினார்.


தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைக்கிணங்க திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ. தி.மு.க அலுவலகத்தில் நகர அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர், மோர் பந்தலை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்து நீர், மோர் இளநீர், தர்பூசனி நுங்கு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலர் சிவாராஜமாணிக்கம், மாவட்ட ஜெ பேரவை செயலர் பொன்வாசுகிராம், நகர செயலர் ஆர்.ஜி. குமார், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலர் லோக அறிவழகன், நீடாமங்கலம் ஒன்றிய மாணவர் அணி தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய இளைஞர் இளம்பெண் பாசறை செயலர் ஆனந்த், உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தருண் சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad