மதசாற்பற்ற அரசு என திமுக சொல்லிகொண்டு இந்து அறநிலையதுறை வருவாயை மற்ற மதத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறது என ஆர்.எஸ்.எஸ் மாநில பொது செயலாளர் முருகானந்தம் மன்னார்குடி அருகே குற்றசாட்டு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 April 2023

மதசாற்பற்ற அரசு என திமுக சொல்லிகொண்டு இந்து அறநிலையதுறை வருவாயை மற்ற மதத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறது என ஆர்.எஸ்.எஸ் மாநில பொது செயலாளர் முருகானந்தம் மன்னார்குடி அருகே குற்றசாட்டு.


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு  கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து  இந்து முன்னணியில் மாநில பொதுச் செயலாளர்  முருகானந்தம்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  தற்பொழுது இருக்கக்கூடிய அரசாங்கம் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்து முன்னணியுடன் நோக்கம் இந்து மதத்தின் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்து மதத்தின் பெருமைகளை புரிய வைக்க வேண்டும்,  இந்த அரசாங்கம் இந்து கோவில்களின் நிலங்களை எடுத்துகொள்கிறார்கள் .  உயர்நீதிமன்ற தீர்ப்பை தற்போது ஆளுகின்ற திமுக அரசு மதிப்பதில்லை. ஊழல் தமிழக அரசு தற்போது அறங்காவலர் கோயில்களின் பெரிய கோயில்களில்  அறங்காவலர் குழு அமைப்பதற்கு 1 கோடி லஞ்சம் கேட்பதாகவும்,  சிறிய கோயில்களுக்கு 50 லட்சம் கேட்பதாகவும் ஒரு தகவல் இருந்து வருகிறது. 



லஞ்சம் கொடுத்து வருபவர்கள் கோயில்களில்  நிர்வாகம் செய்ய முடியாது ஊழல் மட்டுமே செய்வதற்கு இது சாத்தியமாகும் . அறங்காவலராக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே சொல்லி இருக்கிறது இவர்கள் முறையை தவறி அறங்காவலர் குழுவை விற்றுக் கொண்டிருக்கிறார்கள், தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான இடங்களையும் மீட்பதாக ஒரு தவறான செய்தியை சொல்லி வருகிறார்.


ஆனால் எந்த கோயிலுக்கு சொந்தமான இடங்களையும் அவர் மீட்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை என்பது தெரிய வருகிறது. அரசுக்கு  ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சேகர் பாபு கோயில் நிலம் கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்பதாக ஒரு பொய்  செய்தியை சொல்லி வருகிறார்  இந்துக்களை ஏமாற்றவதற்கான வேலையை செய்கிறார் . மதசாற்பற்ற அரசு என திமுக சொல்லிகொண்டு இந்து சமய அறநிலையதுறை வருவாயை மற்ற மதத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறது இந்த திமுக அரசு என குற்றம் சாட்டினார்  .


- செய்தியாளர் தருண் சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad