கடந்த மாதம் 29ஆம் தேதி மத்திய அரசு திருவாரூர் தஞ்சாவூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பானையை வெளியிட்டது. இதனை கண்டிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இது சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு நிலக்கரி எடுக்கும் ஏலத்திட்டத்திற்கான அட்டவணையில் இருந்து டெல்டா பகுதியை நீக்குவதாக இன்று அறிவித்தது. இதனை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் தமிழக விவசாய சங்க கூட்டு இயக்கம் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் மன்னார்குடியில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர் .
- செய்தியாளர் தருண் சுரேஷ்
No comments:
Post a Comment