திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் வட்டம் ஆலங்குடி, மற்றும் திருவோணங்கலம், புலவர் நத்தம், சுரக்குடி, தொழுவூர், குருவாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த திமுக, அமமுக, தேசிய திராவிட முன்னேற்ற கழகம், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக கழக அமைப்பு செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ முன்னிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதில் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் k. சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் v. இளவரசன், பொதுக் குழு உறுப்பினர் ராணி துரைராஜ், எம் ஜி ஆர் மாநில இணை செயலாளர் பாவா கோவிந்த் ராஜ், மாவட்ட பிரதி நிதி k. முனுசாமி, ஊ.ம.துணைத் தலைவர் v. பாலதண்டாயுதபாணி, மாநில எம்ஜிஆர் துணை தலைவர் கு. நடராஜன், K. சங்கர் பாசறை ஒன்றிய செயலாளர், அவைத் தலைவர் P. செல்வ ராஜ் உள்ளிட்ட நிகழ்வில் ஒன்றிய நகர சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
-செய்தியாளர் தருண் சுரேஷ்
No comments:
Post a Comment