இந்நிலையில் அப்பகுதியினர் நேற்று இரவு அனைவரும் உறங்கிய வேளையில் கோவில் பூட்டை ஒடைத்து உள்ளே புகுந்து உண்டியல், தங்க நகைகள், பணம் உள்ளிட்ட மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் அப்ப பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டை உடைத்து கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் பேரில் வலங்கைமான் காவல்துறையினர் நேரில் சென்று பார்வை விட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து கோவில் பூசாரி செல்வா கூறுகையில்:-நேற்று இரவு வழக்கம் போல் 8.50 மணிக்கு கோவிலின் நடை சாற்றப்பட்டது. காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் கோவில் பூட்டை உடைத்து திறந்துகிடைப்பதை கண்டு எனக்கு தகவல் தெரிவித்தனர் உடனே கோவிலுக்குள் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 20000 ஆயிரம் ரொக்க பணமும் அம்மனின் திருமாங்கல்யம் காதில் அணிவிக்ககூடிய குண்டு ஆகியவை திருடு போயிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வலங்கைமான் காவல்துறை ஆய்வாளர் ராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் விசாரணை நடத்தி வருகிறார். மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க பட்ட கோவிலில் அடுத்த வாரம் சித்திரை திருவிழா கொண்டாட உள்ள நிலையில் கோவில் நகைகள் உள்ளே திருடுபோய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-செய்தியாளர் தருண் சுரேஷ்
No comments:
Post a Comment