திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக கெளரவத் தலைவர் ஊராட்சி மன்றத் தலைவருமான சித்தஞ்சன் மற்றும் அரிச்சந்திரபுரம் ஊராட்சி மான்றத் தலைவர் D.செல்வம் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ.வி.குமரேசன் தலைமை வகித்தார், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வடபாதிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் க.ச. சித்தரஞ்சன் வழங்கினார்.
ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாண்மை குழு தலைவர். மேலாண்மை குழு துணைத் தலைவர் கலாதேவி, உள்ளிட்ட மனோகரன், தெட்சிணா மூர்த்தி, நடன சபாபதி, பள்ளி ஆசிரியர்கள் கார்த்தி மாதவன், முருகானந்தம் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- செய்தியாளர் தருண் சுரேஷ்
No comments:
Post a Comment