மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும் என்று மோடி பேசுவது படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற ரீதியில் கருத்துக்கள் இருக்கிறது. என கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 April 2023

மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும் என்று மோடி பேசுவது படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற ரீதியில் கருத்துக்கள் இருக்கிறது. என கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது மத்திய பாஜக அரசு செயல்பாடு ஒரே மாதிரியான அனுகுமுறை இல்லை  பாகுபாடு அனுகு முறை, அரசியல் ரீதியான அனுகு முறையாக மேற்கொள்ள படுகிறது. இதனை மாற்றி கொள்ளாமல் மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும் என்று மோடி பேசுவது  படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற ரீதியில் கருத்துக்கள் இருக்கிறது. 

பேரவையில் மசோதா நிறைவேற்றினால் குறிப்பிட்ட காலத்திற்க்குள் குடியரசு தலைவர், ஆளுநர் முடிவெடுக்க உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்க துறைகள் அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்க பட்டவை, அது சுதந்திரமாக, சுயேட்சையாக செயல்பட வேண்டும். மத்திய அரசு உத்தரவை நிறைவேற்றும் அமைப்புக்களாக மாறியிருப்பது ஜனநாயகத்திற்கு , அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டினை பிளவு ஏற்பட்டுத்த கூடிய செயல் தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல, தூத்துக்குடி  கிராம நிர்வாக அலுவலரை பட்ட பகலில்  அலுவலகத்திலேயே  வைத்து வெட்டி கொலை செய்து இருப்பது  வன்மையாக கண்டிக்கதக்கது  கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள  குற்றவாளிகளுக்கு  அரசு உரிய தண்டணையை வழங்க வேண்டும்.    


12 மணி வேலை நேரம்  உயர்த்தப்பட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்ட சுமூகமாக முடிந்த சூழ்நிலையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்  விக்கிரமராஜா அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர் அல்ல, வியாபாரிகள் சங்கத்திற்கு தலைமை தாங்குபவர் அதுவும் ஒரு பிரிவினுடைய தலைவர். அவர் இது போன்ற பிரச்சனைகளில் கருத்து சொல்லலாம் ஆனால் நிதானமாக சொல்ல வேண்டும். தோழமைக் கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் குருட்டுத்தனமாக இருக்கக் கூடாது இது குறித்து அவர் என்ன வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் ஆனால்  குருட்டுத்தனமாக இருக்கக் கூடாது என்று விக்கிரமராஜா கூறி இருப்பது, நாங்கள் எல்லாம் குருடர்கள் இவர் என்ன அறிவாளியா என கேட்கத் தூண்டும், அது இதுபோல் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. விக்கிரம ராஜா அவர் உயரமறிந்து, அவர் பேச வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.


- செய்தியாளர் தருண் சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad