ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணிக்கு குருபெயர்ச்சி அடைந்தார் தேசிய தலைவர் ஹச்.ராஜா, முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 April 2023

ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணிக்கு குருபெயர்ச்சி அடைந்தார் தேசிய தலைவர் ஹச்.ராஜா, முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.


திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர், நவக்கிரகங்களில் முக்கிய கிரகமும் சுபகிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக கொண்டாட ப்படுகிறது.


நவக்கிரகங்களில் குருபகவானுக்கும் , சனிபகவானுக்கும் தனி இடம் உண்டு.  இந்த இரண்டு கிரகங்களும் இடம்பெயரும் நேரத்தில் ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 ராசிகளுக்கும் பலன்கள் வகுக்கப்படுகின்றன. ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் சிவாலயத்தின் மூலஸ்தான பிரகாரத்தில் பரிகார மூர்த்தியாக ஸ்ரீகுருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு புராதன சிறப்புகளைக்கொண்ட குருபகவான் சன்னதியில் குருபெயர்ச்சிநாளான இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

 

இதனை தொடர்ந்து இரவு 11. 27  மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியானபோது ஸ்ரீகுருபகவானுக்கு  தங்க கவசம் அணிவிக்கபட்டு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து ராஜ அலங்காரத்தில் அலங்கார தீபாரதனையும் அதனை தொடர்ந்து மகா தீபாரதனையம் நடைபெற்றது.


இதன் அடிப்படையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையான ஆலங்குடி ஸ்ரீகுருபகவானை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.


- செய்தியாளர் தருண் சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad