நன்னிலம் தச்சன்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி விழாவில் பெண்கள் முதியவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 April 2023

நன்னிலம் தச்சன்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி விழாவில் பெண்கள் முதியவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள தச்சன்குளம் மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் அந்த வகையில் இந்த வருடம் கடந்த சித்திரை மாதம் ஒன்றாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் காத்தவராயன் கதை பாடி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.



இந்த நிலையில் இன்று தச்சங்குளம் மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கோவிலில் எதிரே தீகுண்டங்கள் ஏற்றப்பட்டது மேலும் மகா மாரியம்மன் மற்றும் காத்தவராயன் சுவாமி எழுந்தருள் செய்யப்பட்டு முக்கிய விதிகளில் வளம் வந்து ஒவ்வொரு வீட்டிலும் தீபாராதனை நடைபெற்றது மேலும் மாரியம்மன் மற்றும் காத்தவராயன் சாமி வீதி உலா முடிவுற்ற பின்னர் கோவிலை அடைந்த உடன் கோவிலில் எதிர்புறம் உள்ள தீக்குண்டத்தில் பெண்கள் முதியவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நிறுத்திக் கடனை செலுத்தினர்.



இந்த தீமிதி நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக நன்னிலம் மட்டுமல்லாது மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad