52 வது தமிழ்நாடு மாநில மகளிர் சதுரங்க போட்டி முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 April 2023

52 வது தமிழ்நாடு மாநில மகளிர் சதுரங்க போட்டி முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.


தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் திருவாரூர் நாராயணி நிதி லிமிடத்துடன் இணைந்து நடத்துகின்ற 52 வது தமிழ்நாடு மாநில மகளிர் சதுரங்க போட்டிகள் திருவாரூர் ராசம்மாள் திருமண அரங்கில் இன்று துவங்கியது. போட்டிகளில் ஆறு முறை மாநில சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த ஜெ சரண்யா ஏசியன் சாம்பியன் பட்டம் வென்ற.அரியலூர் மாவட்டத்தை சார்ந்த  மாவட்டத்தை சேர்ந்த சர்வாணிக்கா காமன்வெல்த் வெங்களப் பதக்கம் வென்ற  செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்தப்பிரிய தர்ஷினி உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சார்ந்த 121 பேர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். 

போட்டிகள் இன்று துவங்கி 5 தினங்கள் 9 சுற்றுகளாக நடைபெறுகிறது போட்டிகளில் முதலிடம் பெறுகின்றவர்கள் நான்கு பேர் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். இந்த போட்டிகளின் துவக்க விழா திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் எஸ் வி.டி ஜே கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

தமிழ்நாடு சதுரங்க கழக  இணை செயலாளர ஆர் கே பால குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.  திருவாரூர் ஹோட்டல் செல்விஸ் நிர்வாகி டாக்டர் பி  செந்தில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் என் சாந்தகுமார் திருவாரூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் கலியபெருமாள் முன்னாள் மாங்குடி கூட்டுறவு சங்க தலைவர் பி கே யூ மணிகண்டன் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜி எஸ் செந்தில் வேல் மன்னார்குடி தரணி குழுமம் எம் இளையராஜா கூத்தாநல்லூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் டாக்டர் ஜே பி பதுருதீன் கொரியர் மதிவாணன் ரயில் பாஸ்கர் ரோட்டரி மாவட்டத்தினுடைய தலைவர் எம் செந்தில் குமார் சதுரங்க கழக மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் போட்டிகளை முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள் நிறைவாக திருவாரூர் மாவட்ட சதுரங்க . கழகத்தின் துணைத் தலைவர் என் முரளிதரன் நன்றிகூறினார்.


- செய்தி : ரா.பிரியங்கா 

No comments:

Post a Comment

Post Top Ad