கடந்த 2017 ஆம் திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக வேறு ஒருவருக்கு பட்டா மாற்றம் செய்து பல கோடி ரூபாய் ஆதாயமடைந்தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செந்தில் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அப்போதைய திருவாரூர் கோட்டாட்சியர் முத்து மீனாட்சி மற்றும் அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையானது இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது முத்து மீனாட்சி தற்போது கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறார் அதேபோல துர்கா ராணி விளமல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா.
No comments:
Post a Comment