சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 256 ஜெந்தி திருநாள் அவர் பிறந்த இல்லத்தில் பஞ்சரெத்தின கீர்த்தனை பாடி இசை கலைஞர்கள் வழிபாடு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 256 ஜெந்தி திருநாள் அவர் பிறந்த இல்லத்தில் பஞ்சரெத்தின கீர்த்தனை பாடி இசை கலைஞர்கள் வழிபாடு.


ஸ்ரீசத்குரு தியாகராஜர் 256வது ஜெயந்தி திருநாள் அவர் பிறந்த இல்லத்தில் இசை கலைஞர்கள் பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை வழிபாடு நடத்தினர். சங்கீத மும்மூர்த்திகளில் இரண்டாவதாக  அவதரித்த ஸ்ரீசத்குரு தியாகராஜர் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள இல்லம் ஒன்றில் கிபி.1767ம் ஆண்டு சித்திரை மாதம் பூச நட்சத்திர நாளில் பிறந்தார். இவர் வாழ்நாளில் எண்ணற்ற சங்கீத கீர்த்தனைகளை இறைவன் மீது இயற்றியுள்ளார். 

ஸ்ரீசத்குரு கீர்த்தனைகளில் பெரும்பாலானவை திவ்யநாம கீர்த்தனைகளாக அமைந்தவை.  இவர் சுமார் 2400க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.         இவரது எண்ணற்ற கீர்த்தனைகளில் மிகவும் பிரசித்திபெற்றது பஞ்சரெத்தின கீர்த்தனைகள். குறிப்பாக ஸ்ரீசத்குருதியாகராஜர் 21 வருடத்தில் 96 கோடி இராமநாம ஜபம் செய்து ஸ்ரீஇராமபிரானை வழிபட ஸ்ரீஇராமபிரான் தனது திருமுகத்தை இவருக்கு  காண்பித்து காட்சியளித்ததாக கூறப்படுகிறது.



ஸ்ரீசத்குரு தியாகராஜர் வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கை வாழ்ந்ததோடு ஒவ்வொரு நாளும் தனது குடும்ப தேவைக்காக நாள்தோறும் உஞ்சவிருத்தி பஜனை மேற்கொண்டு பிக்க்ஷை பாத்திரம் ஏந்தி அரிசியை தானமாக பெற்று மறுநாளுக்கான சேமிப்பு செய்யாமல் வாழ்க்கை வாழ்ந்தவர். பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குருதியாகராஜரின் ஜெயந்தி திருநாளையொட்டி அவர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து இசைகலைஞர்கள் ஸ்ரீசத்குருதியாகராஜர் இயற்றிய பிரசித்தி பெற்ற பஞ்சரெத்தின கீர்த்தனை பாடி இசை ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.


மேலும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இசை விழா அரங்கில் நூற்றுக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்றுசேர அமர்ந்து பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீசத்குருதியாகராஜர் ஜெயந்திநாளில் சாஸ்திர சம்பிரதாயப்படி குழந்தைகள் பிறந்தால் வழங்கப்படும் நெல்விதை தானம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


- செய்தியாளர் ரா.பிரியங்கா. 

No comments:

Post a Comment

Post Top Ad