நன்னிலம் பேரூராட்சியில் 4 அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில்.. ஒவ்வொரு பேரூராட்சி கூட்டத்திலும், நன்னிலம் பகுதி மற்றும் எட்டாவது வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், பேரூராட்சியின் நடவடிக்கைகள் குறித்தும் கவுன்சிலர் செல். சரவணன் பேசியும்... கேள்வி கேட்டும் வந்துள்ளார்..

இந்த நிலையில்... கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நன்னிலம் தச்சன்தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில், கவுன்சிலர் செல் சரவணன் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது... பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்பவரின் மகன் திமுகவை சேர்ந்த பிரபு என்பவர், நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜசேகர் பெயரை குறிப்பிட்டு... "நாங்கல்லாம் யார் தெரியுமா?.. இனிமே நாங்கதான்...' எனக் கூறி.... செல். சரவணனை தாக்கி மார்பு பகுதியில் கையினால் குத்தியுள்ளார்.
இந்த நிலையில் கவுன்சிலர் செல். சரவணனின் மார்பு வலி ஏற்பட்டு நன்னிலம் அரசுமருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரூராட்சி கூட்டங்களில் பொது பிரச்சனைகள் குறித்து பேரூராட்சி தலைவர் திமுகவைச் சார்ந்த ராஜசேகரை எதிர்த்து கேள்வி கேட்டதால்... செல். சரவணன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கவுன்சிலர் செல். சரவணனை தாக்கிய, தலைமறைவான பிரபு மீது வழக்கு பதிவு செய்து நன்னிலம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்..மேலும், இதுகுறித்து நன்னிலம் காவல்துறை ஆய்வாளர் சுகுணா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மேலும், அரசு செயல்பாடுகள் குறித்து மீடியாக்களில் விமர்சனம் செய்பவர்களையும்.. திமுகவினர் தாக்குவது தற்பொழுது தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது..
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment