டெல்டா மாவட்டத்தில் எந்த தொழிற்சாலை வேண்டுமானாலும் அரசு தொடங்கட்டும் நம் ஆட்களுக்கு வேலை கொடுத்தாலும் வேளாண்மையை அழித்து கிராமங்களை அழித்து தொழிற்சாலைகள் வரக்கூடாது என காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மன்னார்குடியில் பேச்சு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 April 2023

டெல்டா மாவட்டத்தில் எந்த தொழிற்சாலை வேண்டுமானாலும் அரசு தொடங்கட்டும் நம் ஆட்களுக்கு வேலை கொடுத்தாலும் வேளாண்மையை அழித்து கிராமங்களை அழித்து தொழிற்சாலைகள் வரக்கூடாது என காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மன்னார்குடியில் பேச்சு.



காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் உழவர் வாழ்வு உயர வேளாண் நிலம் காக்க சிறப்பு கருத்தரங்கம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன் உள்ளிட்ட காவிரி உரிமை மீட்பு குழு மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  100 ஏக்கர் நிலம் வாங்கினால் போதும் அவர் ஒரு நில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு எந்த சட்ட திட்டங்களும் கிடையாது . அவர்களுக்கு இந்த பகுதியில் ஆறு போகிறதா, குளம்போகிறதா, ஏறி போகிறதா என்கிற கவலை எல்லாம் கிடையாது அவர்கள் கேட்கிறதை நாம் ஒப்படைத்து விட வேண்டும் . நீங்கள் ஐந்து ஏக்கர் 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் பிரிவினைவாதிகள், தமிழக அரசு இப்படி ஒரு சட்டத்தை வாதி, பிரதிவாதிகள் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். 

அதானி வாங்கியுள்ள நான்கு லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி தள்ளுபடி என்றால் நாம் பிரச்சனை செய்வோம் ஆனால் மத்திய அரசு அதற்கு ஒரு பெயர் வைத்துள்ளது செயல்படாத சொத்து என பெயர் வைத்துள்ளது இதை செய்வது யார் மத்திய அரசு ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்  விவசாயிகள் என்றால் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு என்பது போல் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 


பொதுமக்களுக்கு இலவச அரிசி போடும் அரசாங்கம் உங்களுக்கு எப்படி லாபகாரம் கிடைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து நெல்லையும் கோதுமையும் குறைந்த விலையில் கொள்முதல் செய்து அதை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுப்பது ஏனென்றால் மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக இந்த செயலை செய்கிறார்கள் தஞ்சாவூர் , திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய காடு , நிலங்கள் எங்கே இருக்கிறது விவசாயிகள் உழுது கொண்டிருக்கின்ற நிலங்களை அழித்து தான் தொழிற்சாலைகளை கொண்டு வரப் போகிறீர்கள் எந்த தொழிற்சாலை வேண்டுமானாலும் தொடங்கட்டும் நம் ஆட்களுக்கு வேலை கொடுத்தாலும் வேளாண்மையை அழித்து கிராமங்களை அழித்து தொழிற்சாலைகள் வரக்கூடாது என்றார் .


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி ப்படுகையில் தொழில் திட்டங்கள் கூடவே கூடாது. , நூறு நாள் வேலைத்திட்டத்தை வேளாண் பணிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் , நீர்நிலைகளை நிலங்களை விழுங்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். , தமிழ்நாடு அரசு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் உருவாக்கி தமிழ்நாட்டு உழவர்களை அதில் இணைக்க வேண்டும் , வேளாண்மை கொள்கையை செழுமையாக்கி தமிழ்நாடு அரசு அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு 12 மணிநேர வேலைக்கான சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைத்திருப்பது போதாது முழுமையாக கைவிட வேண்டும். உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .



-செய்தியாளர்:தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad