
இந்நிலையில் மன்னார்குடி சாமி தியேட்டர் எதிர் புறம் உள்ள ஜங்கரன் காபி பாருக்கு வந்த திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மதி,முத்துக்குமார் , மதி.மணிவண்ணன், இவர்களின் சித்தப்பா கண்ணப்பன் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு சம்மந்தமில்லாமல் கல்லாவில் இருந்த நபரை தகாதவார்த்தைகளால் பேசி பாய்ந்து தாக்கமுற்பட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடையில் உணவருந்த வந்தவர்களை கடையின் உட்புறத்தில் பூட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் .மேலும் இதேபோன்று திமுக நிர்வாகிகள் குறிப்பாக உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு காசு கொடுக்காமல் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் வண்மையாக கண்டித்து வருகின்றனர் .
கடை உரிமையாளர் செந்தில் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர் .திமுக நிர்வாகிகள் கடையில் புகுந்து அராஜக செயலில் ஈடுபடும் சிசிடிவி காட்சி சமூக வலைதலைங்களில் பரவி பெரும் பரபப்பை ஏற்படுத்தி வருகிறது .
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment