இதில் ஒரு லட்ச ரூபாய் வரை செலுத்தியுள்ளதாகவும், மேற்கொண்டு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டிய நிலையில், 2 லட்ச ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என துரை மிரட்டியுள்ளார். மேலும் வீட்டிற்கு சென்று அடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொரடாச்சேரி காவல் நிலையத்தில் சிலம்பரசன் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை போலீசார் துரைக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த சிலம்பரசன் திடீரென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று மறைத்து வைத்திருந்த மன்னனையே தனது உடலில் சிலம்பரசன் ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடனடியாக அருகே இருந்த போலீசார் சாமர்த்தியமாக அவரது உடலில் இருந்த துணிகளை அகற்றி காப்பாற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment