மேலும் இவ்விழா திருவாரூர் ஒன்றியம் புலிவலம் கலைஞர் மின்னொளி அரங்கில் கடந்த ஏப் 7 ஆம் தேதி 2023 முதல் மூன்று நாட்கள் நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் தென்னிந்திய அளவில் நடைப்பெற்ற மாபெரும் கபடித்தொடர் போட்டியில் வெற்றிப்பெற்று முதலிடத்தை பிடித்த அணிக்கு ரூ.1,20,720 ரொக்கப்பணத்தை அவ்வணிக்கு புலிவலம் ஏ.தேவா வழங்கினார். மேலும் இரண்டாமிடத்தை பிடித்த அணிக்கு வெங்கடேஷ் மற்றும் சாம்பசிவம் ஆகியோர் ரூ. 90,070 ரொக்கப்பணத்தை வழங்கினார்கள். தொடர்ந்து, மூன்றாமிடத்தை பிடித்து வெற்றிப்பெற்ற அணியினருக்கு ரூ.60,070 ரொக்கப் பணத்தை அவ்வணியினருக்கு பொதுக்குழு உறுப்பினர் கலியபெருமாள், மற்றும் சி.கே.எஸ் குரூப்ஸ் வழங்கினார்கள். மேலும் தொடர்ந்து நான்காம் இடத்தைப்பிடித்த அணிக்கு ரூ.60,070 ரொக்கப்பணத்தை மாவூர் டேவிட் வழங்கினார்.

மேலும் தொடர்ந்து, கால் இறுதி சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகளுக்கு தலா ரூ. 10,070 ரொக்கப்பணத்தை காளிமுத்து, மக்கள் கார்த்தி, தங்கதுரை ஆகியோர்களால் வழங்கப்பட்டது. மேலும் வேற்றிப் பெற்ற நான்கு அணிகளுக்கும் பரிசு கோப்பைகளை ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் ஏ. தேவா வழங்கினார். சிறந்த ஆட்ட வீர ர்களுக்கான பரிசுகளை துரைராஜ் அவர்களின் நினைவாக ஆனந்தசுந்தரம் மற்றும் பஹஃருதீன் ஆகியோர் வழங்கினார்கள்.
மேலும் இப்போட்டிகளை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் துவக்கி வைத்ததோடு வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மேலும் இந்த தொடர்போட்டியை திருவாரூர் ஒன்றிய திமுக கழகம் புலிவலம் செவன் டைகர்ஸ் கபடிக்கழகம் ஆகியவை இணைந்து இவ்விழாவினை வெகுச் சிறப்பாக நடத்தினார்கள்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment