கோட்டூர் ஒன்றியம் பனையூர் ஊராட்சியில் 5 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கட்டப்பட்டுவரும் பெண்கள் கழிவறை கட்டடத்தினையும்8 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் பனையூர் கீழத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினையும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வெட்டுக்குளத்தின் சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வந்து செல்லும் வழி புதிதாக அமைக்கப்படவுள்ளதையும், தெற்கு வாட்டார் பகுதியில் 10.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினையும்;, .5.25 லட்சம் மதிப்பீட்டில் குன்னியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுவரும் பெண்கள் கழிவறை கட்டடத்தினையும், .33.34 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறை கட்டடத்தினையும்.33.38 லட்சம் மதிப்பீட்டில் சேந்தமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறை கட்டடத்தினையும், .2 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் சேந்தமங்கலம் பகுதியில் அவாஸ் யோனா ப்ளஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், .522.10 லட்சம் மதிப்பீட்டில் கோட்டூர் பகுதியில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்காக பணி நடைபெற்றுவருவதையும் பார்வையிட்டு உரிய அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனா மணி கோட்டூர் ஒன்றியக் குழுத்தலைவர் மணிமேகலை மன்னார்குடி வட்டாட்சியர் ஜீவானந்தம் கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிழகன் மாலதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment