ஒரு கோடி இலக்கு நிர்ணயித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடைவிடாது புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை நடத்தி இலக்கை அடைய சுறுசுறுப்புடன் செயலாற்றி வரும் திருவாரூர் மாவட்ட திமுகவினர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 April 2023

ஒரு கோடி இலக்கு நிர்ணயித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடைவிடாது புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை நடத்தி இலக்கை அடைய சுறுசுறுப்புடன் செயலாற்றி வரும் திருவாரூர் மாவட்ட திமுகவினர்.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகளுடன், திமுகவில் புதிய உறுப்பினர்களாக புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் மகளிர் என அனைவரையும் உள்ளடக்கிய புதிய உறுப்பினர்களை இணைத்திட வேண்டுமென்றும், மேலும் அதற்கான இலக்கு ஒரு கோடி என அவர் அறிவுறுத்தல் மற்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களை சார்ந்த அக்கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கிடையே வெகு விரைவாக இடைவிடாது, நாள்தோறும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம்களை நடத்தி விரைவில் அவ்விலக்கை எட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும், மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் சுறுசுறுப்புடன் போட்டிப் போட்டுக்கொண்டு புதிய உறுப்பினர்களை அக்கட்சியில் இணைத்து வருகின்றனர்.


அதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டம் மற்றும் திருவாரூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டச்செயலாளர் பூண்டி கே. கலைவாணன் வழிகாட்டுதலின் படி அங்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.


மேலும் இம்முகாமில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் தேவா, புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயல் நடவடிக்கையில் படு மும்முரமாக செயல்பட்டுக் கொண்டுருந்தார். மேலும் அப்போது அவ்வொன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிளை திமுக செயலாளர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கி அவர்களிடம் தளபதி நிர்ணயித்த இலக்கின் எண்ணிக்கையில் பெரும் பகுதி உறுப்பினர்கள் நமது மாவட்டமாகதான் இருக்க வேண்டும் அதனால் ஓய்வின்றி உழைத்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்றவாறு அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.


மேலும் இந்நிகழ்ச்சியின் போது, ஒன்றிய அவைத்தலைவர் மாவூர் செல்வராஜ், டேவிட் உள்ளிட்ட திரளான திமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.


- செய்தியாளர் ரா.பிரியங்கா 

No comments:

Post a Comment

Post Top Ad