திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 February 2026

திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.


திருவாரூர், பிப். 03:


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட இயக்கத்தின் பேரறிஞருமான சி.ந. அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பொது விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த பொது விருந்து நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் மக்களாக அமர்ந்து உணவருந்தினர்.


வடை, பாயசம் உள்ளிட்ட அறுசுவை உணவுகளுடன் நடைபெற்ற இந்த பொது விருந்து நிகழ்ச்சியில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா, திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ், திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad