திருவாரூர் – டிசம்பர் 08
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், கணினி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் சிஐடியு ஊராட்சி ஊழியர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து துப்புரவு மற்றும் தூய்மை தொடர்பான பணியாளர்கள், OHT இயக்குனர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் ஆகியோரையும் நிரந்தரப் பணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
மேலும், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும், கொரோனா காலத்தில் அரசு அறிவித்த ₹15,000 உதவித்தொகையை வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.
சில நேரம் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்ந்து நடந்தது. ஊழியர்கள் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:
Post a Comment