திருவாரூர் – டிசம்பர் 08
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள உச்சிவாடி கிராம மக்கள், கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
உச்சிவாடி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி, ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகியாக இருந்து வருகிறார். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சில தனியர் ஆக்கிரமித்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த நிலம் மீட்கப்பட்டது.
ஆனால் தற்போது, அந்த நிலம் மீண்டும் கோவிலின் கட்டுப்பாட்டிற்கு செல்லாத வகையில் சிலர் சிக்கல் ஏற்படுத்தி வருவதாக நிர்வாகமும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர். கோவில் சொந்தத்தில் உள்ள நிலத்திற்கு கம்பி வேலி அமைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், மேலும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, கிராம மக்கள் பெருந்திரளாக பங்கேற்று மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:
Post a Comment