திருவாரூர், டிச. 30:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முரசொலி (தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு துணைத் தலைவருமானவர்), மோகனச்சந்திரன் (திருவாரூர் மாவட்ட ஆட்சியர்), பூண்டி கலைவாணன் (திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், திட்டங்களின் செயல்பாடு, பயனாளிகள் தேர்வு, நிதி பயன்பாடு உள்ளிட்ட விவரங்கள் குறித்து முதல் நிலை அரசு அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.
தொடர்ந்து பேசிய தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி,
“அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்வதில் அரசு அலுவலர்கள் முழு உழைப்புடன் செயல்பட வேண்டும்”
என்று வலியுறுத்தினார்.
மேலும்,
-
சுய உதவி குழுக்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும்,
-
பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,
-
மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நலத்திட்டங்கள் தவறாது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
என அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருள்செல்வன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment