திருவாரூர்:
திருவாரூர் கடைதெருவில் உள்ள தனியார் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கணினி பயிற்றுநர்களின் பணியை நிரந்தரப்படுத்தி, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி திருவாரூரில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசு கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்கத்தினரை அரசு தரப்பில் நேரடியாக அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும், பணிநிரந்தரம் செய்து பணி பாதுகாப்புடன் காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின் மூலம், கணினி பயிற்றுநர்களின் நியாயமான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment