கோட்டூர், டிச. 12:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திலுள்ள விக்கிரவாண்டியம் கிராமத்தில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2015ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக திருவாரூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக பி.ஆர். பாண்டியன் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை கண்டித்தும், பி.ஆர். பாண்டியனை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், தமிழகத்தை விட்டு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் வெளியேற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அனைத்து கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

No comments:
Post a Comment