திருவாரூர் – டிசம்பர் 08
திருவாரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட, ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் சிறப்பு பயிற்சி பட்டறை மன்னார்குடியில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ராஜராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான செயல்திட்டங்கள், தொகுதி வாரியான அமைப்புச் செயல்கள், வாக்காளர் தொடர்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக, நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக இளம் பெண் பாசறை நிர்வாகிகள், அமமுக நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சிகளிலிருந்து வந்த மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு கழக காற்பந்துகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் மன்னார்குடி நகர செயலாளர் ரஞ்சித், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் முகுந்தன், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துச் சொற்பொழிவுகள் வழங்கினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.jpeg)
No comments:
Post a Comment