வலங்கைமான் — நவம்பர் 22
வலங்கைமான் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளிவநல்லூர் பகுதியில் இன்று விபத்தில் சிக்கிய முதியவரை பாதசாரி போல் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தானாகவே நின்று முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களை நெகிழச்செய்தது.
சுப்ரமணியன் என்ற முதியவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது தவறிவிழுந்து படுகாயமடைந்தார். தன்னால் எழுந்து நிற்க முடியாமல் சாலையோரத்தில் வலி கொண்டு தவித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அப்பகுதியாக புறப்பட்டு சென்றபோது, நிகழ்வை கண்டு உடனே வாகனத்தை நிறுத்தி, முதியவருக்கு தண்ணீர் குடிக்க வைத்து, காயங்களுக்கு தற்காலிக முதலுதவி செய்தார். பின்னர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடி சிகிச்சைக்காக தனது உதவியுடன் அனுப்பி வைத்தார். முன்னாள் அமைச்சர் நேரடியாக மனிதநேய உணர்வுடன் உதவி செய்ததை கண்டு அப்பகுதி மக்கள் தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment