திருவாரூர், நவம்பர் 21
திருவாரூர் நகரின் மையப்பகுதியான தெற்கு வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் அழகு நிலையத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பெண் ஊழியர்கள் காலை 10 மணியளவில் அழகு நிலையத்தை திறந்து மின்சாதனங்களை இயக்கியபோது திடீரென மின்கசிவு ஏற்பட்டது.
சில நொடிகளில் அழகு நிலையம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் பரவியது. உயிர் அச்சத்தில் அலறியபடி பெண் ஊழியர்கள் அனைவரும் வேகமாக வெளியேறினர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் புகை மேல்மாடிகளுக்கும் பரவி, திருவாரூர் நகரின் பெரும்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உள்ளமைப்புகள் பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சேதமடைந்தன. இன்று காலை சென்னை ராயப்பேட்டை பிரபல மாலில் தீ விபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே திருவாரூரில் இந்த சம்பவம் நடந்ததால், நகரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

No comments:
Post a Comment