வலங்கைமான், நவம்பர் 21
வலங்கைமான் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அதிமுக மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் வலங்கைமான் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களுக்குட்பட்ட 83–ரெகுநாதாபுரம், அவளிவநல்லுர், விளத்தூர், களத்தூர், வீராணம், ஆவூர், கோவிந்தக்குடி, 44–ரெகுநாதாபுரம், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பணிகளை அவர் கண்காணித்தார்.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எந்த பணிகளை முன்னுரிமையாக கவனிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை ஆர். காமராஜ் வழங்கினார். இந்த ஆய்வில் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் சங்கர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment