சம்பா பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் – பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 November 2025

சம்பா பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் – பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்.


மன்னார்குடி, நவம்பர் 12:

சம்பா பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதியை நவம்பர் 31 வரை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்தால் அறுவடை பணிகள் இன்றுவரை (நவம்பர் 10) நீண்டுள்ளது. இதனால் சம்பா நெல் விதைப்பு மற்றும் சாகுபடி துவக்கம் தாமதமாகி தற்போது தான் தீவிரமடைந்துள்ளது.”


அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

“மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கிராமப்புறங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால், விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக காப்பீடு செய்வதில் தடை நிலவுகிறது.”

எனவே, தமிழக அரசு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பா பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவை நவம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad