மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்த போக்குவரத்து, அஞ்சல் துறை, ரயில்வே, காவல்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஓய்வூதியதாரர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்,
“தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று கோரிக்கை முன்வைத்தனர்.
மேலும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி முழுமையான மருத்துவ வசதி வழங்குதல், மற்றும் பொது நலனுக்கான புதிய ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பலரும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் குரு சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட பொருளாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்று பின்னர் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662
.jpg)
No comments:
Post a Comment