மன்னார்குடி | நவம்பர் 18
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற அடையாள வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுகுமார் தலைமையேற்றார். இதில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் முருகையன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ், பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
-
தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
-
ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.
-
கருணை அடிப்படை நியமனத்தின் அளவை 25% ஆக உயர்த்த வேண்டும்.
-
உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர் நியமனத்தைத் தடை செய்ய வேண்டும்.
-
மொத்தம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

No comments:
Post a Comment