தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வலியுறுத்தும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள நிலையில், தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், விவசாயிகள் மன்ற தலைவர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இயற்கை விவசாயிகள் பெரும் நெருக்கடியில்
-
நாடு முழுவதும் 23 லட்சம் ஹெக்டேரில் பதிவு பெற்ற இயற்கை விவசாயிகள் உள்ளனர்.
-
மேலும் 5 லட்சம் இயற்கை விவசாயிகள் சான்று பெறாத நிலையிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
-
இதுவரை மத்திய அரசு உற்பத்தி மானியம் வழங்காததால், இயற்கை விவசாயிகள் செயற்கை விவசாயத்திற்குத் தள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
MSP & விலை உயர்வு promises – நடைமுறைப்படுத்தப்படவில்லை
-
தானியங்களுக்கு இரு மடங்கு விலை வழங்குவதாக பிரதமர் கூறினாலும்,இதுவரை எந்தப் பயிருக்கும் இரட்டை விலை உறுதி செய்யப்படவில்லை.
-
அதேவேளை உழவுப் பொருட்கள் மற்றும் உள்ளீடு பொருட்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
12 ஆண்டுகளாக விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி இல்லை
-
“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி வழங்கும் மத்திய அரசு,12 ஆண்டுகளாக விவசாயிகளின் கடனைக் கைவிட்டு தள்ளுபடி செய்யாமல் உள்ளது” என கண்ணன் குற்றம் சாட்டினார்.
பயிர் காப்பீட்டு திட்டம் – பயனளிக்காதது
-
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதால்,பயிர் சேதத்திற்கு உரிய நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
-
இதனால் பேரிடர் சூழ்நிலைகளில் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
-
“இந்தத் திட்டத்தை மத்திய அரசு தானே நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.


No comments:
Post a Comment