திருவாரூர், நவம்பர் 06 -
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததுடன், அதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என பாஜக மகளிர் அணியினர் குற்றம்சாட்டினர்.
இந்தக் குற்றச்சாட்டை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் மகளிர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் டாக்டர் திவ்யா சேஷாத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
அவர்கள், கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கடும் கண்டனத்துடன் எதிர்த்து, தொடர்ந்து நடைபெறும் இத்தகைய குற்றங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும் நிலையில், அரசு அதற்குரிய நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதே சரியான தீர்வு எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment