சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டு சிறை – திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 6 November 2025

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டு சிறை – திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


திருவாரூர், நவம்பர் 06 -

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த லலிதா (40) என்பவர், அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். 2021 அக்டோபர் 26 அன்று 10ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஒருவர் மாயமானதாக அவரது பெற்றோர் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சிறுவனை லலிதா கடத்திச் சென்று ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் அறை எடுத்து தங்கியிருந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.


இதையடுத்து, போலீசார் லலிதாவை குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான (போக்ஸோ) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில், நீதிபதி சரத்ராஜ், குற்றவாளி லலிதாவிற்கு ஐந்து பிரிவுகளின் கீழ் மொத்தம் 54 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.18 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகள் ஒன்றாக அனுபவிக்கப்பட வேண்டும் என கூறி, அதன்படி குற்றவாளி 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்க நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பிறகு, லலிதாவை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad