மன்னார்குடி, அக். 28 -
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் “மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்”, “22 சதவீத ஈரப்பதம் வரை நெல் வாங்க அரசு அனுமதி வழங்க வேண்டும்”, “நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ள நெல்லை உடனடியாக அகற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
அத்துடன், பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர், அவர்கள் சார்பாக கோரிக்கை மனுவை வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
.jpg)
No comments:
Post a Comment