இந்த நிலையில் தமிழக முதல்வர் டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூலை 24 ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த வகையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்புக்கு வந்த தண்ணீர் கோரையாறு, பாமணி ஆறு ,சிறிய வண்ணாறு ஆறுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது .
விவசாயிகள் தற்போது 2 லட்சத்து 53 ஆயிரத்து 533 ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக தண்ணீர் திறந்து இதுவரை 40 நாட்கள் ஆகியும்.
பைங்காட்டூர் , வாலிஓடை, மேலபுத்தூர் , கடைத்தெரு, ரெங்கநாதபுரம் , வாட்டார் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்துள்ளனர். போதிய தண்ணீர் இல்லாததால் 5000 ஏக்கர் சம்பா பயிர்கள் கருக தொடங்கியுள்ளது.
பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் வயல்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வாய்க்காலில் உள்ள தண்ணீரை குடத்தில் எடுத்து கொண்டு வயல்களில் தெளித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கோரையாற்றிலிருந்து தட்டான்கோவில் தலைப்பிலிருந்து பிரியும் பைங்காட்டூர் வாய்க்கால்களில் தண்ணீர் முழுமையாக சென்றாலும் வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகி வருகிறது.
இதுகுறித்து பலமுறை விவசாயிகள் ஒன்று திரண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் இரண்டு நாட்களில் தண்ணீர் திறந்துவிட என்றால் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment